முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த வருடம் மார்ச் மாதம் 8ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், 366ஆவது நாளாக இன்று தொடர்கிறது.
இந்த போராட்டம் ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் உள்ள மதகுருமார்கள், சிவில் சமுக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளும், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
- காணாமல்போனோர் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்
- “குரோத உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடவேண்டாம்”
- கண்டியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்