இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தனது 82 வயதில் இன்று காலமானார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், உடல் நலக் குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரசியலிலும், சமூகப் பணியிலும் ஜஸ்வந்த் சிங்கின் செயல்பாடுகள் தனித்துவமானவை. பாஜகவை வலுப்படுத்தியதில் முக்கியமானவர்.
அவருடனான உரையாடல்களை என்றும் நினைவில் கொள்வேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Jaswant Singh Ji will be remembered for his unique perspective on matters of politics and society. He also contributed to the strengthening of the BJP. I will always remember our interactions. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
“வாஜ்பாய் அரசாங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஜஸ்வந்த் சிங். நிதித்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறையில் வலுவான தடங்களை பதித்தவர்,” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக் காலத்தில் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங், தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:
கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்
Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.