Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

முன்னணி இயக்குனர்கள் ஒன்றிணைந்த பாவ கதைகள் ட்ரைலர் வெளியானது

திரையரங்கங்கள் முழுமையாக இயங்க இன்னும் சில காலங்கள் பிடிக்கும் என்பதை உணர்ந்த இயக்குநர்கள் ஓடிடி தளங்களுக்கு ஆந்தாலஜி திரைப்படங்களை எடுத்துவருகிறார்கள்.

அப்படி, ஆந்தாலஜியாக ஓடிடியில் அடுத்து ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் குறும் படங்களின் தொகுப்பு ‘பாவக்கதைகள்’. இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வருகிற டிசம்பர் 18ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

வெற்றிமாறன், சுதாகொங்கரா, கெளதம்மேனன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் இந்த ஆந்தாலஜி படம் உருவாகியிருக்கிறது.

இயக்குநர் சுதாகொங்கரா இயக்கும் படத்தின் டைட்டில் தங்கம். இதில் பவானி ஸ்ரீ, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்திற்கு லவ் பண்ண உட்றனும் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அஞ்சலி, கல்கி கோச்சிலின், பதம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெற்றி மாறன் இயக்கியிருக்கும் குறுங்கதையின் டைட்டில் ஓர் இரவு என வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி நடித்திருக்கிறார்கள்.

அதுபோல, கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படத்துக்கு வான்மகள் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் சிம்ரனுடன் கெளதம் மேனனே நடிக்கவும் செய்திருக்கிறார்.

தமிழ் குடும்பங்களில் அதிகரித்திருக்கும் சாதிய வண்ணங்கள் ஆணவப்படுகொலை சுட்டிக்காட்டும் விதமாக இத்திரைப்படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது.

வேற்று மதத்தினர் இடையே உருவாகும் காதல், ஒரே பாலினத்தவர் இடம் உருவாகும் காதல் என பல்வேறு காதல் கதைகளை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை இத்திரைப்படம் வெளிப்படுத்தும் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. திரைப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் திரைப்படத்தில் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x