Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

முதல் வெற்றியை பெற்றது கொழும்பு கிங்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் (LPL)T20 கிரிக்கெட் தொடரில் ஆரம்ப போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இரண்டு அணிகளும் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தலா 219 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சுப்பர் ஓவரின் மூலம் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

கொழும்பு கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.

இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடி T20 ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. லோரி எவன்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில் தன்னுடைய இரண்டாவது ஓவரை வீசிய இர்பான் பதான் தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.

தினேஸ் சந்திமால் 80 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் திக்ஷில டி சில்வா (22) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனால், கொழும்பு கிங்ஸ் அணி பின்னடைவை சந்தித்தது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்