முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா

முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா?

முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா?

நமது வீட்டில் காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் இப்படி பல வகையான பொருட்களை நாம் குளிர் சாதன பெட்டியில் தான் வைத்து பயன்படுத்துகிறோம்.

ஆனால், குளிர் சாதன பெட்டியில் வைக்க கூடாத பலவகையான பொருட்களும் இருக்கின்றன.

உதாரணத்துக்கு தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை இந்த வரிசையில் அடங்கும். இதில் மிக முக்கியமான ஒன்று முட்டை. ஜப்பானியர்கள் முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைப்பது கிடையாது.

குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைக்கலாமா?

முட்டை ஏன் குளிர் சாதன பெட்டியில் வைக்க கூடாது என சொல்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் சால்மோனெல்லா (Salmonella) என்கிற பாக்டீரியா தான்.

இந்த சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா விலங்குகளின் குடலில் வாழ கூடிய ஒரு வகை நல்ல பாக்டீரியா. ஆனால், இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்து விட்டால், மனிதனுக்கு தீங்கை விளைவிக்குமாம். இவை முட்டையின் மேல் ஓட்டிலும், உட்பகுதியில் இருக்கிறதாம்.

வட்ஸ்அப்பில் கிடைக்க இருக்கும் அட்டகாசமான வசதிகள்!

முட்டை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் அந்த பாக்டீரியாவை அப்படியே தான் இருக்க போகின்றன.

முட்டை வெளியில் வைத்தாலும் இந்த பாக்டீரியா அதில் இருக்குமாம். நாம் குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைப்பதை நிர்ணயிப்பதே இந்த பாக்டீரியா தான்.

அமெரிக்கர்களின் முறை

அமெரிக்கர்கள் இந்த முட்டை குளிர் சாதன பெட்டியில் வைத்து தான் பராமரிப்பார்களாம். முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால் முட்டை கெட்டு போகாமல் தடுக்கலாம் என இவர்கள் நம்புகிறார்கள். குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைப்பதால் பாக்டீரியா அதனுள் செல்லாமல் இருக்குமே தவிர இறந்து விடாது.

ஜப்பானியர்களின் ரகசியம்

அமெரிக்கர்கள் குளிர் சாதன பெட்டியில் முட்டை வைப்பதை போன்று ஐரோப்பர்கள் வைப்பது இல்லை. இவர்கள் வெளியே முட்டையை வைத்து பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் முட்டையை பெறும் முன் பல வகையில் தூய்மையாக வைத்து கொள்ள செய்கின்றனர். அவர்களின் ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிக்கின்றன.

அப்போ என்னதான் செய்யலாம்?

குளிர் சாதன பெட்டியில் முட்டை வைப்பதால் முட்டை நீண்ட நாட்கள் கெடமல் இருக்குமே தவிர அதில் உள்ள பாக்டீரியா சாகாது. எனவே, முட்டையை உள்ளே வைத்தாலும் வெளியே வைத்தாலும் அதில் உள்ள பாக்டீரியா தான் முக்கிய பங்காக விளங்கும்.

முட்டை அதிக நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் மட்டுமே குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ள வேண்டும். எதுவாக இருந்தாலும் முட்டையை நாம் வேக வைத்தோ, பொறித்தோ சாப்பிடும் போது அந்த சூட்டில் சல்மோனேல்லா பாக்டீரியா இறந்து விடுமாம்.

நாட்கள் கணக்கு

குளிர் சாதன பெட்டியில் முட்டை வைத்து பயன்படுத்தினால் 7 முதல் 10 நாட்கள் கெடாமல் இருக்குமாம். இதுவே வெளியில் வைத்து அப்படியே பயன்படுத்தினால் 3 முதல் 4 நாட்கள் கெடாமல் இருக்கும்.

இது குளிர் காலத்திற்கான கணக்காகும். இது கோடை காலத்தில் சற்றே மாறுபடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல

Next Article
சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும்

இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும்?

Related Posts
Read More

இந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும்,…
Read More

முள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ…
Read More

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்…!

காதல் ஒரு அழகான, விவரிக்க முடியாத உணர்வு. உங்களுக்கு பிடித்த ஒருவரைபார்க்கும்போது, மெதுவாக காதலிக்கத் தொடங்குங்கள், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஒருவரின்…
Total
3
Share