Thu, Jan21, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

முட்டைகளை உடைக்காமல் காரை ரிவர்ஸ் எடுத்த 4 வயது சிறுவன்..!

4 வயது சிறுவன் ஒருவன் தனது பொம்மை காரை முட்டைகளை உடைக்காமல் ரிவர்ஸ் எடுக்கும் வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

4 வயது சிறுவன் ஒருவன் தனது பொம்மை காரில் அமர்ந்தபடி காரை ரிவர்ஸ் எடுக்கிறான். அப்படியே மெல்ல நகர்ந்து 4 அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டைகளுக்கு நடுவே காரை பின்பக்கமாக இயக்குகிறான்.

ஆனால் முட்டைகளை சேதப்படுத்தவில்லை. சிறுவனின் இந்த அசாத்திய திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

லின் லின் என்ற இந்த சிறுவன் வடக்கு சீனாவில் வசித்து வருகிறான். கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் தானாகவே ரிவர்ஸ் எடுக்க கற்றுக்கொண்டதாக அவனது தந்தை கூறியுள்ளார்.

அதிக நேரம் பொம்மை கார் ஓட்டுவதிலேயே நேரம் செலவழித்து வரும் இந்த சிறுவனுக்கு எதிர்காலத்தில் கார் ரேஸ்சில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தான் விருப்பமாம்.

இந்த வீடியோவை சிறுவனின் தந்தை தான் எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான ஒருசில நாட்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்