முடிவுக்கு வந்தது அண்டர்டேக்கர் சகாப்தம்

கடந்த 30 வருடங்களாக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டில் மிகப்பெரிய சகாப்தம் என்று வர்ணிக்கப்பட்டு வரும் அண்டர்டேகர், நேற்றுடன் (21) ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ‘அண்டர்டேகர் தி ஃபைனல் ரைட்’ என்கிற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.

அண்டர்டேகரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் இந்த ஆவணப்படத்தின் கடைசிப் பகுதியில், தனக்கு மீண்டும் ரெஸ்ட்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என்று அண்டர்டேகர் தெரிவித்துள்ளார்.

“அந்த பயணத்தை முடிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். இதற்குமேல் நான் சாதிக்க எதுவும் இல்லை. வெற்றி பெறவும் எதுவுமில்லை. ஆட்டமும் மாறிவிட்டது.

புதியவர்கள் வருவதற்கான நேரம் அமைந்துவிட்டது. நான் வெளியேறுவதற்கு இதுதான் சரியான நேரமாகத் தோன்றுகிறது. இந்த ஆவணப்படம் மூலம் அதனை புரிந்துகொள்கிறேன்” என்று அவர் பேசியுள்ளார்.

1990-ம் ஆண்டு WWE என்னும் உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளில் அறிமுகமானார். கடைசியாக இவர் வரெஸில்மேனியா 36-ம் பதிப்பில் விளையாடினார்.

இதுவரை வரெஸிமேனியாவில் சண்டையிட்ட 27 போட்டிகளில் 25-ல் அண்டர்டேகர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 08 பேர் கைது

Next Article

தனிமைப்படுத்தல் முகாமில் 2 பெண்கள் வன்புணர்வு

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

லங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. காலி கிளாடியேற்றர்ஸ் அணியுடனானா இந்தப் போட்டி, ஹம்பாந்தோட்டை…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!

ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர்…
Total
3
Share