Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மீண்டும் வருமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 5 ஆவது நாளாக இன்று (22) முன்னிலையானார்.

இதன்போது, சுமார் 1 மணித்தியாலம் வாக்குமூலமளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து சென்றுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 05ஆம் திகதி முன்னிலையாகினார்.

அவரிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் கடந்த 12ஆம் திகதி அங்கு முன்னிலையாகி சுமார் 06 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, 14 ஆம் திகதி மீண்டும் ஆஜராகி சுமார் ஐந்து மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கினார்.

பின்னர் கடந்த 17 ஆம் திகதியும், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 4 ஆவது தடவையாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜரானார்.

இதேவேளை, அவரை மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news