Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

மீண்டும் இணையும் தலைவி படக்குழு… இப்போது யாராக நடிக்கிறார் கங்கனா?

அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி ரிலீஸூக்குத் தயாராகியுள்ளது.

ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத், எம்.ஜி.ஆர். ரோலில் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படமானது வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் வெளியாகாவிட்டாலும், அடுத்தப் படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் இயக்குநர் விஜய். இந்தமுறை வரலாற்றுக் காவியமொன்றை படமாக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழின் மாபெரும் இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் கண்ணகி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு படமொன்றை இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கண்ணகியை படமாக்க காரணமே, தலைவி படத்தில் பணியாற்றிய விஜயேந்திர பிரசாத் தானாம்.

பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தின் திரைக்கதையாசிரியரும், ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திரபிரசாத் தான், தலைவி படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.

அவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, சிலப்பதிகாரத்தை படமாக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம் இயக்குனர் விஜய்.

கண்ணகி கதைக்குத் திரைக்கதை எழுத விஜயேந்திர பிரசாத்தை கேட்டிருக்கிறார் அவர். அவரும் சம்மதம் சொல்லியதாகத் தெரிகிறது.

அதோடு, கண்ணகியாக நடிக்க கங்கனாவும் சம்மதம் சொல்லியிருக்கிறாரம். அதனால், இந்தப் படத்திற்கான பணிகளில் மும்மரமாக இருக்கிறார் விஜய்.

தலைவி வெளியாகும் முன்பே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானால் நன்றாக இருக்காதென படக்குழு மெளனம் காக்கிறதாம். தலைவி ரிலீஸ் உறுதியானதும் கண்ணகி திரைப்படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x