மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூரில் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளதாக, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 280ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள்.

உட்லண்ட்ஸ் கிரெசண்ட் வட்டாரத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் போதைமிகு அபின், கஞ்சா, ஐஸ் ஆகிய போதைப்பொருளும் 21ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமான ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.

அங்கு சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஜூரோங் ஈஸ்ட், யீஷூன் வட்டாரங்களில் நடந்த மற்ற இரண்டு சோதனைகளில் எஞ்சிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தத்தில் மூன்றரை கிலோகிராமுக்கும் அதிகமான போதைமிகு அபின், இரண்டு கிலோகிராம் கஞ்சா, 162 கிராம் ஐஸ், 45 எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

கரடி தாக்கி உயிர்பிழைத்த சிறுவன்

Next Article
விபத்து

ரயில் - முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; இருவர் படுகாயம்

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு துப்பாக்கிச்சூடு, பன்னிப்பிட்டிய, தெபானம
Read More

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
0
Share