‘மாஸ்க் அணியாதோர் கல்லறை தோண்ட வேண்டும்’ நூதன தண்டனை

முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்கள், கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்ட வேண்டும் என்ற, நூதன தண்டனை இந்தோனேசியாவில் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் நாடமாடும் நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இதுவரை 2.25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது; 8,965 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது, பணியாளர்கள் குறைவாக உள்ளனர்.

எனவே, முகக் கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா காலத்தில் முக கவசம் மிகவும் அத்தியாவசியமானது.

எனவே இந்த தண்டனையானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும்’ என்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
5
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

பிரபல நடிகைகளுக்கு ஆறுதல் கூறிய சமந்தா!

Next Article

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

Related Posts
Read More

டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது; எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக…
தைவான், தாய்வான், நாடாளுமன்றம், பன்றி குடல்
Read More

தாய்வான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்

அமெரிக்காவுடன் தாய்வான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தாய்வான் ஜனாதிபதி…
தூக்கு தண்டனை
Read More

கொரோனாவால் இருவருக்கு தூக்கு தண்டனை விதித்த கிம் ஜாங் அன்

வடகொரியா நாட்டின் ஜனாதிபதி கிம் ஜங் அன் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வந்தாலும், வடகொரியா…
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
Total
5
Share