Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

மாகாண சபை தேர்தல் : எந்தவொரு வெளி சக்திக்கும் அரசாங்கம் அடி பணியவில்லை

இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தற்பொழுது ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இந்த விடயத்திற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் ZOOM தொழில்நுட்பத்தில் நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின் போது அது காலவரையறை இன்றி ஒத்திபோடப்பட்டது.

இதனால் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x