இலங்கைமலையகம்

மஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா புரன்ஸ் வீக் ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (27) காலை 11 மணி அளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர் இன்று காலை ஏழு மணி அளவில் வீட்டில் எவரிடமும் சொல்லாமல் வீட்டை வீட்டு வெளியேறியதாக அவரின் மனைவி, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மஸ்கெலியா புரன்ஸ் வீக் ஆற்று பகுதியில் குறித்த நபரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதை உறவினர் ஒருவர் இனங்கண்டு மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனை, அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் மஸ்கெலியா புரன்ஸ் வீக் இரானி தோட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் சூரியகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close