மலேசியாவின் புதிய பிரதமராகிறார் அன்வார் இப்ராகிம்

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளதாக அரண்மனை அறிவிப்பினை இன்று வெளியிட்டது.

மலேசியாவின் புதிய பிரதமராகிறார் அன்வார் இப்ராகிம்

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளதாக அரண்மனை அறிவிப்பினை இன்று வெளியிட்டது.

இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். மலேசிய நேரப்படி இன்று  மாலை 5 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும்.

அரண்மனையின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில நாள்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. இம்முறை சுமார் 70 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. 

எனினும் இம்முறை எந்தவோர் அரசியல் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனவே தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய அணிகளை அமைக்க அரசியல்  கட்சிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன.

சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்பட்டு வந்த பிறகு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார் அன்வார்.

தமக்கு ஒருமுறை வாய்ப்பளித்தால், நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல முடியும் என்று தொடர்ந்து கூறி வந்தார் அன்வார். அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.