Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை நாளை கையளிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளைய தினம் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது.

Latest news

Related news