மர்மமான முறையில் உயிரிழந்த பெண் நீதிபதி, கணவர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த பெண் நீதிபதி, கணவர்

அமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள பெர்னாலில்லோ கவுன்டி பகுதிக்கு உட்பட்ட ஆல்புகுர்கு நகர் பகுதியில் வசித்து வருபவர் பெண் நீதிபதி டையானே ஆல்பர்ட் (65). இவரது கணவர் எரிக் பின்கர்டன்(63).

இந்நிலையில் இவரது வீட்டில் திடீரென வளர்த்து வந்த செல்லப் பிராணிகள், டையானே ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளது. மேலும் டையானேவின் கணவரும் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மனைவி மற்றும் வளர்ப்பு பிராணிகளை கணவர் எரிக் சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து, தீவிரமாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.