மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி!

பூச்சி மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து மனைவியே கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், அந்த பெண்ணுக்கு கணவன் மற்றும் கள்ளக் காதலன் இல்லாமல் மேலும் ஒரு கள்ளக் காதலன் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதான தரணி தரன், வாடகை கார் ஓட்டி வந்தார். இவருடைய மனைவி 31 வயதான பவானி வீட்டில் இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளன.

இதனிடையே, சென்னை பூந்தமல்லி திருமால் நகரைச் சேர்ந்த 31 வயதான தினேஷ், தரணி தரன் உடன் சேர்ந்து, அவரும் வாடகை கார் ஓட்டி வருவதாகத் தெரிகிறது. அத்துடன் தினேஷ், ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் நண்பர்கள் என்பதால், தினேஷ் அடிக்கடி தரணி தரன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

முக்கியமாக, தினேஷ் – தரணி தரன் ஆகிய இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக, மது போதையில் இருக்கும் தரணி தரனை வீட்டிற்கு விட வரும் போது, தரணி தரன் மனைவிக்கும், தினேஷ்க்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகத் தெரிகிறது. மேலும், தங்களது கள்ளக்காதலுக்குக் கணவர் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர்.

இதன் காரணமாக, கடந்த 21 ஆம் திகதி பூச்சி மருந்துக்கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்து உணவில் கலந்து கொடுத்து, கணவரைக் கொன்றுவிடும் படி தினேஷ் கூறி உள்ளான்.

அதன்படி, பவானியும் தன் கணவருக்கு இரவு சாப்பாடு கொடுக்கும் போது உணவில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். அதனைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கிய தரணிதரன், 22 ஆம் திகதி காலையில் வழக்கம் போல் எழுந்து வாந்தி எடுத்துள்ளார்.

அத்துடன், இரவில் மது குடித்ததால், தற்போது வாந்தி வருகிறது என்று நினைத்த அவர், மனைவியிடம் காபி வாங்கி குடித்துவிட்டு தன்னை பத்து மணிக்கு எழுப்பி விடுமாறு கூறிவிட்டு, மீணடம் வீட்டில் படுத்துத் தூங்கி உள்ளார்.

பூச்சி மருந்து கொடுத்தும் கணவன் சாகாததால் ஆத்திரமடைந்த மனைவி பவானி, தனது கள்ளக் காதலன் தினேசுக்கு தகவல் கூறி உள்ளார். இதனால், தினேஷ் உடனே வீட்டிற்கு வருவதாகக் கூறி உள்ளார். தினேஷ் வருவதற்குள், தனது 2 மகள்களையும் மாடியில் உள்ள தாத்தா வீட்டிற்குப் பவானி அனுப்பி வைத்து உள்ளார்.

அதன்படி, அடுத்த சில நிமிடங்களில் தினேஷ் வீட்டிற்கு வந்ததும், தூங்கிக்கொண்டிருந்த தன் நண்பன் தரணிதரனின் கழுத்தை, தினேஷ் துப்பட்டாவால் இறுக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு, தரணிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போல் செட்டப் செய்து விட்டு தினேஷ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். அதன் பிறகு, “கடன் தொல்லையால் துப்பட்டாவால் தனக்குத் தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக” அவரது மனைவி பவானி கூறி நாடகம் ஆடி உள்ளார்.

இது தொடர்பாக விரைந்து வந்த பொலிஸார், தற்கொலை செய்துகொண்ட தரணிதரன் உடலையும் பார்த்துள்ளனர். அப்போது, பவானியின் செயல்பாடுகளையும் கவனித்துள்ளனர்.

இதனால், பாவனி மீது பொலிஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. “கடன் தொல்லையால் துப்பட்டாவால் தனக்குத் தானே கழுத்தை இறுக்கிக் கொண்டு கணவர் தற்கொலை செய்து கொண்டதாக” மனைவி பவானி, பூந்தமல்லி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் பவானியின் அலைபேசியை ஆராய்ந்தனர். அப்போது, தரணிதரன் இறப்பதற்கு முன்பும் தினேஷ்க்கு அதிகமான அழைப்பு எடுத்து பேசியது தெரிய வந்தது. இதன் அடிப்படையில், பவானி மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் அழைத்து பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், கள்ளக் காதலர்கள் இருவரும் சேர்ந்து தரணிதரனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், பவானியிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு, அவரது அலைபேசியை ஆராய்ந்து பார்த்தபோது, பவானிக்கு அதே பகுதியில் மேலும் ஒரு கள்ளக் காதலன் இருப்பதும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மேலும், தரணிதரன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து வீட்டில் கள்ளக் காதலர்கள் இருவரும் பொலிஸார் முன்னிலையில் நடித்துக் காட்டினார்கள். அதனை பொலிஸார் வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ரிஷாட் பதியுதீன்

வாக்குமூலமளித்து ரிஷாட் பதியுதீன் வெளியேறினார்

Next Article
காணாமல் போன கான்ஸ்டபிள்

ஆடைகள் இன்றி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Total
2
Share