Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

மரியாதை தான் முக்கியம்.. சுரேஷ் சக்ரவர்த்தி – அனிதா இடையே இன்றும் சண்டை

அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையேயான பிரச்னை இன்றும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் நான்காவது சீசன் துவங்கிய இரண்டாவது நாளே அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் இடையே சண்டை வெடித்திருக்கிறது. அது நேற்றோடு முடிந்துவிட்டது என்று பார்த்தால், இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து செய்தி வாசிப்பது போல பேசி காட்டினார்.

சுரேஷ் சக்ரவர்த்தி பற்றி அனிதா சம்பத் செய்தி வாசித்த போது, அவரை கிண்டல் செய்யும் வகையில் சுரேஷ் சக்ரவர்த்தி “நான் தள்ளி நிற்கிறேன். சிலர் வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும்” என கூறினார்.

அதற்குப் பிறகு செய்தி வாசிப்பவர்களுக்கு எச்சில் தெறிக்கும் என சுரேஷ் சக்கரவர்த்தி சொன்னது தனக்கு வருத்தம் அளித்தது என அனிதா சம்பத் அவரிடம் பேசினார். அந்த வாக்குவாதம் நேற்று சண்டையில் முடிந்தது.

அதற்குப் பின் நடிகை ரேகா வந்து அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் வாக்குவாதம் நின்றபாடில்லை. அதற்குப் பிறகு நீண்ட நேரம் கழித்து அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் கை குலுக்குவது போல சமாதானம் அடைந்தார்கள்.

நேற்று சமாதானம் அடைந்த அவர்கள் இருவரும் இன்று மீண்டும் சண்டையை தொடங்கி இருக்கிறார்கள் என்பது தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

‘பேசாதே’ என சுரேஷ் சக்ரவர்த்தி சொல்ல, ‘அப்படி சொன்னால் என்னால் பேசாமல் எல்லாம் இருக்க முடியாது’ என அனிதா சம்பத் கோபத்துடன் கூறுகிறார். ‘மரியாதை கொடுங்கள்’ நீங்கள் லிமிட் தாண்டினால்..’ என கோபத்துடன் சுரேஷ் கூறுகிறார். அதற்கு அனிதா சம்பத் ‘நான் மேடத்திடம் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என பதிலளிக்கிறார்.

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, என்னை செருப்பால் அடிப்பவர்கள் உடன் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை’ என சுரேஷ் சக்ரவர்த்தி கூறும்போது அருகில் இருக்கும் பாலாஜி முருகதாஸ், ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்றால் அப்போது எருமை மாட்டுக்கு என்ன சூடு’ என கேட்கிறார். அதைக் கேட்ட அனிதா சத்தமாக சிரித்து விடுகிறார்.

‘வயதானவர்களுக்கும் அவளுக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது’ என சொல்கிறார் சுரேஷ். மேலும் ‘நாம் 100 நாள் இருக்கவேண்டும்’ என்று ரேகா அட்வைஸ் கொடுக்கும் போது, ‘வேண்டாம் எனக்கு நான் மரியாதையுடன் இருக்க வேண்டும். நான் வம்புக்கு போகமாட்டேன். என்னங்க.. சின்ன பொண்ணு, பெரிய பொண்ணு.. அடல்ட்.. சும்மா இருங்க’ என கோபத்துடன் ரேகாவிடம் கூறுகிறார்.

இப்படி இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருப்பதால் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் இடையேயான பிரச்சனை இன்னும் பெரிய அளவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x