Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தடை!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன.

இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா என மூத்த தலைவர்கள் வங்கத்தில் முகாமிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடந்த பிரச்சாரத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி விதிகளை மீறி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதாகவும், முஸ்லிம் வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தில் பாஜக தரப்பினர் புகார் அளித்திருந்த நிலையில், இதற்கு மம்தா அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்தச் சூழலில் மம்தா அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி அவர் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு மாநில முதல்வருக்கே பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பது, அரசியல் கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x