Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

‘மனஉறுதியுடன் போராடுங்கள்’ ரவிசாஸ்திரி வேண்டுகோள்

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் நேற்றைய தினம் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தொடர் ஆரம்பமாகியதில் இருந்து காலநிலை மிகவும் கடினமாகவே உள்ளதாகவும், அதற்கு ஏற்ப துடுப்பாட்ட வீரர்கள் மன உறுதியுடன் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதுகுவலியால் அவதிப்பட்ட அணித்தலைவர் விராட் கோலி தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மோதல் குற்றச்சாட்டு வழக்கில் விடுவிக்கப்பட்டதும் உடனடியாக அழைக்கப்பட்டு அணியுடன் இணைந்துள்ளார்.
எனினும், 3ஆவது டெஸ்டில் அவர் இடம்பெறுவார் என்பதை உறுதியாக கூற முடியாது என, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவோர் பெய்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அறிமுகப்படுத்தும் பதிய மைதானம்

மகத்தின் மோசடி விளையாட்டு: ஐஸ்வர்யா ஆவேசம் அடையாதது ஏன்?

ஈவு இரக்கம் இல்லாம புரட்டி எடுத்த ஆஸி உலகசாதனை!

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x