மசாஜ் சேவைக்கு ஆசைப்பட்டு சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை

நடமாடும் உடற்பிடிப்பு சேவை வழங்குவதாக பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்து விட்டு, அங்கு சென்ற இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டு அவரது உடைமைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, நடமாடும் உடற்பிடிப்பு  சேவையை பெற்றுக்கொள்ள  கடற்கரைக்கு சென்ற இளைஞன் தாக்கப்பட்டு அவரது, அலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் முகநூல் பக்கத்தில் பெண்களைப் போன்று பாவனை காட்டி விளம்பரம் செய்து நாகசந்தியா கடற்கரைக்கு பாதிக்கப்பட்ட இளைஞனை வரவழைத்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய களுத்துறை வடக்கு மற்றும் வஸ்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வஸ்கடுவ வாடியமன்கட பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.