Thu, Jan21, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்க பேய்களை கட்டவிழ்த்த கிராம நிர்வாகம்.!

மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்க பேய்களை கட்டவிழ்த்த கிராம நிர்வாகம்.!

இந்தோனேசிய நாட்டில் கொரோனாவின் தாக்கத்திற்கு 4,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 459 சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது.

இந்த நிலையில், மக்கள் இல்லத்தில் இருந்து வெளியே வராமல் இருக்க, அங்குள்ள ஜாவா தீவு பகுதியில் உள்ள கே பு கிராமத்தில் மனிதர்கள் பேய் வேடமிட்டு வீதிகளில் உலா வருகின்றனர்.

இந்த நூதன நடவடிக்கையை மக்கள் பேய்கள் என நினைத்து, வெளியே வருவதை தவித்து வருகின்றனர். இந்த முயற்சி தொடர்பாக அந்த கிராம தலைவர் தெரிவிக்கையில், வித்தியாசமாக இருக்க வேண்டும், மக்களும் நோயின் தீவிரத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்க பேய்களை கட்டவிழ்த்த கிராம நிர்வாகம்.!

இதன் காரணமாகவே பேய் போல வேடமிட்டு இளைஞர்களை உலா வர அறிவுறுத்தியுள்ளோம். பேய்களை கண்டால் மக்கள் அச்சத்துடன் வெளியே வரமாட்டார்கள்.

இந்த முயற்சிக்கு காவல் துறையினர் சார்பாக ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தில் உள்ளவாறு கண் மை போகங் என்று அழைக்கப்படும் பேய் வேடத்தில், முகத்தில் பவுடர் போட்டு உடலை வெண்ணிற ஆடையால் சுற்றி வருவதாகும்.

இந்த கண்காணிப்பு பேய் பணி இரவு பகலாக நடந்து வரும் நிலையில், சீன நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பை அடுத்து, கிராம மக்கள் தாமாக முன்வந்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்க பேய்களை கட்டவிழ்த்த கிராம நிர்வாகம்.!

இந்த பேய்களுக்கு மக்களை கண்காணிப்பது, மக்கள் கிராமத்தில் இருந்து வெளியே செல்லாமல் இருப்பதை கவனமாக பார்த்துக்கொள்வது போன்ற நடவடிக்கை உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் நோயின் தாக்கம் இல்லாத பட்சத்திலும், பேய் இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்