போதைப்பொருள் வியாபாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் புதிய தீர்மானம்

போதைப்பொருள் நடவடிக்கை உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளின் மூலம் திரட்டப்படும் பணம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அரச அதிகாரிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சட்ட விரோதமாக பெறப்படும் பணம், வானகம், காணி, வீடு மற்றும் கட்டங்களுக்கான நபர்களை கைது செய்து விழக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணையை பூர்த்தி செய்து சொத்துக்களை அரச உடமையாக்கும் வரையில் அவர்கள் சொத்துக்களை அனுபவிப்பது தொடர்பாக இதன் பொது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் மூலம் பணம் சம்பாதித்தல், அந்த பணம் மற்றும் சொத்துக்களை சட்ட விராத நோக்கத்துக்காக பயன்படுத்துவதை தடுப்பதற்காகவும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் சட்ட விரோதமாக சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை அரசுடமையாக்குவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் ஆரம்பத்திலேயே இந்த சொத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

பணத்தை தூய்மைப்படுத்தல் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டு இலக்கம் 6 இன் கீழான பண மேசடி சட்டத்தின் விதிகள்; தொடர்பில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல் மற்றும் தற்பொழுது உள்ள விதிகளுக்கு அமைவாக செயற்படக்கூடிய முறை தொடர்பிலும் அதிகாரிகள் விடயங்களை முன்வைத்துள்ளனர்.

இதற்கு அமைவாக ஏற்பாடுகளின் அடிப்படையில் உடனடியாக செயற்படுவதற்கு தேவையான சட்ட திருத்தத்தை மேற்கொள்வதை கவனத்தில் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
6
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
முட்டை

முட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்

Next Article
வன்புணர்வு

9 பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்த 11 பேர்

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு துப்பாக்கிச்சூடு, பன்னிப்பிட்டிய, தெபானம
Read More

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
6
Share