எதிர்வரம் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வருடம் தேர்தல் ஆண்டு என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக வேண்டும் என்பதே தமது கட்சியின் யோசனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வேட்புமனு வழங்கும் தினத்திற்கு முன்தினமே இதுதொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அன்று காணப்பட்ட பலம் அதேபோன்று இன்றும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.