Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம்; இணைய கருத்து கணிப்பை சுட்டிகாட்டும் டிரம்ப்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாநிலங்களில் டிரம்ப்பின் சட்ட முயற்சிகள் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இந்த நிலையில். அவர் இப்போது அமெரிக்க தேர்தல் முடிவுகளை மறுக்க இணைய கருத்துக்கணிப்புகளை மேற்கோள் காட்டி வருகிறார்.

98.9 சதவீத பார்வையாளர்கள் அவர் தேர்தலை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை என்று டிரம்ப் ஒரு இணைய கருத்துக் கணிப்பை டுவீட் செய்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப் பைடனின் வெற்றியை ஒப்புக் கொள்ள வேண்டுமா? என்ற இந்த கருத்து கணிப்பில் 192,774 பேர் வாக்களித்ததாக கூறிய டிரம்ப் ‘கருத்துக் கணிப்பின்’ முடிவுகளின்படி, 98.9 சதவீதம் அல்லது 190,593 பேர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளவில்லை.

அதே நேரத்தில் 1.1 சதவீதம் அல்லது 2,181 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். நம் நாட்டின் நன்மைக்காக, நாம் வெற்றிபெற வேண்டும்! என டிரம்ப் டுவீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், உலக அரங்கில் அமெரிக்கா மீண்டும் “வழிநடத்தத் தயாராக” இருப்பதாகக் கூறி உள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news