இந்தியாகுற்றம்

பெண்ணின் சடலத்தை கடித்து சாப்பிட்ட நரிகள்… நடுக்காட்டில் பயங்கரம்!

மகாராஷ்டிராவின் நந்தேடு மாவட்டத்தில் தமகான் என்ற கிராமத்தில் உள்ள நடுக்காட்டில் 16 வயது சிறுமியின் சடலத்தை நரிகள் சாப்பிட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு வசித்த 16 வயது சிறுமி கடந்த 20ஆம் திகதி காணாமல் போய்விட்டார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

2 நாள் கழித்து, பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் மீட்டபோது, நரிகள், நாய்கள் சடலத்தை கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு போனதாக கூறியுள்ளனர்.

விசாரணையில் சிறுமி, அந்த பகுதியில் உள்ள இளைஞனை ஒன்றரை வருஷமாக காதலித்து வந்துள்ளது தெரியவந்தது.

அதனால் காதலன்தான் தங்கள் மகளை காட்டுக்குள் அழைத்து சென்று கொன்றிருக்க வேண்டும் என்று குடும்பத்தினர் சொன்னார்கள்.

இதனால் அந்த இளைஞரை காவல்துறையினர் விசாரணை செய்தனர், ஆனால், சிறுமி குடும்பத்தினர் புகார் தர முன்வராததால், அந்த குடும்பத்தினர் மீதே காவல்துறையினர் சந்தேக பார்வை திரும்பியது.

அப்போதுதான் சிறுமியின் 26 வயதான அண்ணன் அனில் சூர்யவன்ஷி மீது சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில், தங்கையை தான் கொன்றதாக அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

தங்கை இன்னொரு இளைஞருடன் பழகுவது பிடிக்கவில்லை என்பதால், அவரை கொலை செய்து காட்டில் சடவத்தை வீசிவிட்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close