Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பெண்ணின் குளியலறைக்குள்ளிருந்து குளிர் காற்று… முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பின்னால் மறைந்திருந்த மர்மம்

நியூயார்க்கில் பெண் ஒருவர் தனது குளியலறையில் குளிர்ந்த காற்று வீசுவதை உணர்ந்து ஆச்சரியமடைந்துள்ளார்.

அங்கு ஜன்னல்களே இல்லாத நிலையில் எப்படி காற்று வீசுகிறது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளார் சமந்தா ஹார்ட்ஸ்டோ என்ற அந்த பெண்.

அப்போது, அங்கு மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அவர் அகற்ற, அதற்குப் பின்னால் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துவாரம் ஒன்று இருப்பதைக் கண்ட சமந்தா, தன் நண்பர்கள் இருவரை வரச்சொல்லி அவர்கள் உடன் இருக்க, அதன் வழியாக நுழைந்திருக்கிறார்.

பார்த்தால், அங்கே இன்னொரு வீடே இருந்திருக்கிறது. இரண்டு படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட ஒரு வீடு தனது குளியலறைக்குப் பின்னால் மறைந்திருப்பதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார் சமந்தா.

எல்லாவற்றிற்கும் மேல், அங்கு யாரோ பயன்படுத்திவிட்டு வைத்துப்போன ஒரு தண்ணீர் போத்தலும் இருக்க, சரி, யாரோ தினமும் அங்கு வந்து போகிறார்கள் என்ற முடிவுக்கும் வந்துள்ளார் சமந்தா.

இந்த துப்பறியும் நிகழ்வை ஒரு வீடியோவாக பதிவு செய்த சமந்தா, அதை ட்விட்டரில் வெளியிட்டு, நாளை இந்த நிலத்தின் உரிமையாளரை சந்தித்து விளக்கம் கேட்கபோகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு கமெண்ட் செய்தவர்களோ, பேசாமல் இரு பெண்ணே, உனக்கு கூடுதலாக ஒரு வீடு கிடைத்திருக்கிறது, அதை பயன்படுத்திக்கொள், யாரிடமும் எதுவும் சொல்லாதே என்று கூறியிருக்கிறார்கள்.

நியூயார்க்கில் ஒரு வீட்டின் விலையில் இரண்டு வீடுகள், இதைப்போய் யாராவது வெளியே சொல்வார்களா? சொல்லாதே என்கிறார் மற்றொருவர். இன்னொருவரோ, பார்த்து, சினிமாவில் வருவதுபோல் யாரோ தங்கியிருக்கப்போகிறார்கள் எச்சரிக்கை என்கிறார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x