Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

‘புராதன வழிபாட்டு இடங்களில் வழிபாடுகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’

இலங்கையில் இந்துக்களின் புராதன வழிபாட்டு இடங்களில் பூசை வழிபாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதி வழங்க வேண்டும் என்று சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர் அ. மாதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா நொச்சிமோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொல்லியல் திணைக்களம் புராதன இடங்களுக்கு சென்று அங்கு வழிபாடுகளை செய்வதற்கு தடைவிதித்து வருகின்றது.

நாங்கள் வெறுமனே ஆலயங்களில் மட்டும் வழிபட்டு வருபவர்கள் அல்ல, இங்குள்ள புராதான இடங்களிலும் வழிபட்டு வருகின்றோம். இந்நிலையில், புராதான இடமான வெடுக்குநாரி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் கைது செய்யப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் திணைக்களமானது கொடுப்பனவை பெற்றுக்கொண்டு செயற்படுகின்றது. ஆனால் நாங்கள் மண்னை, மரத்தை, வழிபட்டு வருவதோடு நாங்கள் எந்தவித கொடுப்பனவும் இல்லாமல் எங்கள் புராதான இடங்களை பாதுகாத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் உள்ள புராதான இடங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் எங்களது கலாச்சாரம் சார்ந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்குடனே எங்களது ஆலயங்களாக இருக்கட்டும் அல்லது அமைப்புக்களாக இருக்கட்டும், பரிபாலனசபைகள் அனைத்துமே செயற்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவிலே குறுந்தூர்மலையிலே ஆதிகாலம் தொட்டு ஆதிலிங்கேஸ்வரர் வழிபாடு முறைகள் இருந்து வருகின்றது.

ஆனால் தொல்பொருள் திணைக்களம் அங்கு சென்று வழிபாட்டு முறைகளிலே இருக்கக்கூடிய எங்களது வழிபாட்டு சின்னங்களை சிதைத்து இருப்பது கவலையளிக்கும் விடமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரும் நேரடியாக கவனித்து எங்களது வழிபாட்டு முறைகளை அறிந்த நீங்கள் எங்களது வழிபாட்டுக்காக அனைத்து ஆலயங்களிலும் சென்று வழிபடுவதற்கு அனைவருக்கும் சமத்துவமான உரிமையை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x