ASUS

புத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS

ASUS நிறுவனம் தனது ZenBook Classic தொடரில், 13.3 அங்குல ZenBook 13 (UX325) மற்றும் 14 அங்குல  ZenBook 14 (UX425) ஆகிய இரண்டு புதிய தலைமுறை ultraportable மடிக்கணனிகள் இரண்டை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு மொடல்களும் மிகவும் இலகுவானவை. ZenBook 13 மொடல் வெறும் 1.07 கிலோ எடை கொண்டது.  அவை Thunderbolt™ 3 USB-C®,  பல தரப்பட்ட இணைப்பிற்காக microSD card reader ஆகியவற்றுக்கு மேலதிகமாக முழு அளவிலான HDMI மற்றும் USB Type-A ports உள்ளிட்ட விரிவான I/O திறன்களை வழங்கும் உலகின் மிக மெல்லிய மடிக்கணனிகளாகும்.

ZenBook 13, ZenBook 14 மற்றும் Core i7 தொடர் வரையில், அண்மைய 10 வது தலைமுறை Intel Core புரசசர்களினால் வலுவூட்டப்படுகின்றன. அவை முன்னைய தலைமுறையை விட வேகமான, மென்மையான, பதில் செயலாற்றும் செயல்திறனை வழங்கும்.

தினசரி பல்வேறு பணிகள் மற்றும் பொழுதுபோக்கு மூலம் பாவனையாளர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் 32 GB வரை அதிவேக  RAM ஐக் கொண்டுள்ளன. செயல்திறனைப் பொறுத்தவரை, மடிக்கணனிகளில் வேகமான திட-நிலை சேமிப்பகம் வழங்கப்பட்டுள்ளது, 2TB PCIe® 3.0 x4 SSDsகள் வரையானவை விரைவான தொடக்க நேரங்களையும், உடனடி அப்ளிகேஷன் செயற்பாட்டையும் உறுதி செய்கின்றன.

புதிய WiFi 6 (802.11ax) மூலம் பாவனையாளர்கள் WiFi 5 ஐ விட 3X வேகத்தில் வயர்லெஸ் வேகத்தை அனுபவித்து மகிழ முடியும். நன்கு அடக்கமான  நான்கு பக்க NanoEdge திரைகள், முழுமையான காட்சிகளுக்கு 90% screen-to-body விகிதத்தை வழங்குவதுடன், மின்கல ஆயுளை அதிகரிக்கும் ultra-low power 1-watt display தெரிவையும் கொண்டுள்ளன.

ZenBook 13 மற்றும் 14 ஆகியவை நம்பமுடியாத அளவிற்கு சக்தியை திறம்பட கையாளுவதுடன், ஒரே மின்னேற்றத்தில் 22 மணிநேர மின்கல ஆயுளை வழங்குகின்றன. வேகமான மின்னேற்ற அம்சமானது வெறும் 49 நிமிடங்களில் 60% மின்னேற்றத்தை வழங்குகின்றது.

மேலும், புதிய ASUS USB-C Easy Charge அம்சமானது எந்தவொரு நியம standard USB-C Power Delivery-certified சார்ஜருடனும் அதி துரிதமாக மின்னேற்றம் செய்ய அனுமதிப்பதுடன், wall sockets இல்லாத போது airline chargers, portable chargers அல்லது power banks மூலம் மெதுவாக மின்னேற்றம் செய்யவும்  வழி செய்கின்றது.

இதன் Thunderbolt 3 USB-C ports மற்றும் அவற்றின் வசதியான connectors உடன்,  4K UHD வெளியக திரைகளை இணைக்க முடியுமென்பதால் நன்கு விசாலமான காட்சி அனுபவத்தை உங்களது வேலைக்காக பெற்றுக்கொள்ள முடியும். மேலும் கோப்புகளை விரைவாக இடம் மாற்றிக்கொள்ள 40 Gbps வரையான தரவு வேகத்தையும் கொண்டது.

இந்த 13.9 மிமீ மெல்லிய மொடல்கள் ASUS NumberPad 2.0 போன்ற அம்சங்களை உள்ளடக்குவதற்காக பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. NumberPad 2.0 வானது இது LED இனால் ஒளியூட்டப்படும் முழு அளவிலான எண் கீபேட்டுடன் கூடிய, இரட்டை செயற்பாட்டினை மேற்கொள்ளக் கூடிய touchpad ஐ கொண்ட edge-to-edge keyboard ஆகும். இது தட்டச்சு செய்யும் போது அதிகபட்ச சௌகரியத்தை வழங்குவதுடன்,  முகத்தை வேகமாக அடையாளம் காண IR கமெராக்களைக் கொண்டது.

“வேலை செய்தாலும், உருவாக்கங்கள் சார்ந்த பணியாக இருந்தாலும்,பொழுதுபோக்காக இருந்தாலும் ZenBook 13 மற்றும்  ZenBook 14 மூலம் அனைத்தையும் இலகுவாக மேற்கொள்ள முடிவதுடன்,  எம்மில் பலர் பழக்கப்பட்டுள்ள உடனடி வாழ்க்கை முறைக்கு பொருந்துவதாக உள்ளது. ZenBook தொடரானது ஸ்டைல், வலு மற்றும் இலகுவாக  எடுத்துச் செல்லக் கூடிய தன்மை ஆகியவற்றுடன் முழுமையான செயல்திறனை வழங்குகின்றது,” என Leon Yu, Regional Director, System Business Group, ASUS India & South Asia தெரிவிக்கின்றார்.

இந்த ஸ்டைலான புதிய ZenBook 13 மற்றும்  14 ஆகியன Pine Grey மற்றும் Lilac Mist  ஆகிய இரண்டு நேர்த்தியான மற்றும் அதி நவீன வண்ணங்களில்  கிடைக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு விஜயம் செய்யுங்கள்: www.asus.com/lk

 ASUS தொடர்பில்

ASUS என்பது உலகின் சிறந்த motherboards, PCs, monitors, graphics cards மற்றும் routers போன்ற தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற ஒரு பல்தேசிய நிறுவனமென்பதுடன், இது மிகவும் போற்றப்படும் புத்தாக்கம் மிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இயங்கி வருகின்றது.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிபுணர்களை உள்ளடக்கிய 5,000 க்கும் மேற்பட்ட உலகளாவிய தொழிலாளர் படையைக் கொண்டு, அனைவருக்கும் எங்கும் நிறைந்த, புத்திசாலித்தனமான, இதயபூர்வமான மற்றும் மகிழ்ச்சியான ஸ்மார்ட் வாழ்க்கையை உருவாக்க  அதி நவீன வடிவமைப்பு மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் ஊடாக தொழில்துறையை ஆஸூஸ் வழிநடத்துகிறது. இது பல விருதுகளையும் வென்றுள்ளதுடன், மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
Pelwatte Dairy

நுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy

Next Article
கந்தப்பளை

விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

Related Posts
Pelwatte redefining health and safety measures
Read More

கொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புகழ்பெற்ற உள்ளூர் பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy, தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் காலப்பகுதியில் அதன் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பாதுகாப்பினை…
Read More

Singer இன் நேர்த்தியான சமையலறை built-in உபகரணங்கள்

ஆடம்பர மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருவதை நாம் தொடர்ந்து அவதானித்து வரும் நிலையில்,  நவீன வாழ்க்கை முறையானது எமது வேகமான வாழ்வில்…
Read More

Pelwatte Dairyயின் மற்றொரு நிலைபேறான திட்டம்

உள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Pelwatte Dairy Industries  ,  தனது பாலுற்பத்திப் பொருட்களின் ஊடாக ஊட்டச்சத்தினை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், பாற்பண்ணையாளர்களுக்கும்…
Read More

சீனி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையை குறிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய பொதிசெய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம்…
Total
0
Share