Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன் – சீசன் 2

கொரோனா தொற்றுநோயால் பல சவால்கள் இருந்தபோதிலும் ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பு சமீபத்தில் பீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன் எனப்படும் இசைத்தொகுப்பின், இரண்டாவது அத்தியாயத்தை நடாத்தி முடித்தது.

புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப மற்றும் அதிகாரிகள் செயல்படுத்தும் சுகாதார முன்னெச்சரிக்கைகளுக்கு ஏற்ப ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பானது ஆக்கப்பூர்வமாக இசை நிகழ்ச்சியை பேஸ்புக் மற்றும் யூடியூப் வழியாக நேரடியாக ஒளிபரப்பியது.

பீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன் அத்தியாயம் இரண்டிற்காக புதிதாக உருவாக்கப்பட்ட 6 பாடல்கள் அன்று நிகழ்த்தப்பட்டன. இதனை முகநூல் பக்கத்தில் நேரடி இசை நிகழ்ச்சியைப் பார்க்க அல்லது தனித்தனியாக பாடல்களைக் கேட்க உங்களை அழைக்கிறோம்!

நிகழ்வை தொகுத்து வழங்கிய தனு இன்னாசித்தம்பி மற்றும் தங்களது பாடல் திறமையினால் பார்வையாளர்களை கவர்ந்த “சிங்கிங் பொட்டேடோஸ்” என்றழைக்கப்படும் இசைக்குழு ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக எங்களால் அன்றைய நிகழ்வில் பங்கேற்றுக்கொள்ள வைக்க  முடிந்தது!

மிக முக்கியமாக இந்த இசைக் கச்சேரியை நிகழ்த்திய ரந்தீர் வித்தான ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பின் இசைத் துறை மற்றும் இந்த திட்டத்தின் தலைவராக உள்ளார்.

அத்தோடு இசைத்தொகுப்பை தயாரித்து இளம் கலைஞர்களுக்கு தனது நேரத்தை அர்ப்பணித்த கென் லப்பன் நேரடி நிகழ்ச்சிக்கான பயிற்சியை அவர்களுக்கு  அளித்தது மட்டுமன்றி தி அவுட்லாஸ் எனப்படும் இவரின் குழு இந்நிகழ்வில் இசையமைப்பு செய்தது. .

இலங்கை மற்றும் மாலைதீவிற்குரிய  அமெரிக்க தூதரகத்தினால்  வழங்கப்படும் சிறிய மற்றும் வலிமை மிக்க நிதியின் கீழ் செயற்படுத்தப்பட்ட ஒரு செயல்திட்டமாக “பீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன்” அதன் இயல்பில் மிகவும் தனித்துவமானது. இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் திறன் இசைக்கு உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் வருடாந்த எதிர்கால தலைவர்கள் மாநாட்டில் 25 மாவட்டங்களிலிருந்தும் 3500 க்கும் மேற்பட்ட மாணவர் தலைவர்களை ஈடுபடுத்தியதில் ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பிற்கு 14 வருட அனுபவம் உள்ளது, மேலும் இது இந்த கோட்பாட்டிற்கான சிறந்த முன்னோட்டம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

எங்கள் மாநாட்டில் இசை மற்றும் கலைப் பிரிவின் விளைவாக, பல்வேறு பின்னணியிலான இளைஞர்கள் மற்றும் பெண்கள் இன அல்லது மத ரீதியில் தங்கள் முதல் நேர்மறையான அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பானது நாடு முழுவதும் பரந்த அளவிலான பார்வையாளர்களை ஈடுபடுத்துகிறது, பிரபல இசைக்கலைஞர்கள் மற்றும் மாறுபட்ட உள்ளூர் திறமைகளைக் கொண்டு BOON போன்ற முயற்சிகள் பொதுவாக ஒரு நல்லிணக்க நிகழ்வில் கலந்து கொள்ளாத புதிய பார்வையாளர்களை ஈர்க்கும்.

இதன் மூலம் வன்முறை தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்கான அதிக ஆபத்தில் இருக்கும் இளைஞர்களை அடையக்கூடிய திறனை நமக்கு இந்நிகழ்வுகள் தருகிறது. இலங்கை போன்ற வளரும் நாடுகளில், பெற்றோர்கள் முக்கியமாக கல்வித்துறை மற்றும் வர்த்தகம், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற பாரம்பரிய தேர்வுகளிலிருந்து ஒரு வாழ்க்கையை வடிவமைப்பதை வலியுறுத்துகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இசையும் கலைகளும் பெரும்பாலும் தொடர விருப்பங்களாக அமைவதில்லை. கலைகளில் ஒரு தொழில் சாத்தியத்தை அனுபவிக்க அவர்களுக்கு உதவும் ஒரு முயற்சியானது சமூகத்தில் சாதகமான தாக்கமொன்றை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கு ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதால், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை இந்த வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைக்கிறது.  ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பானது தனது நல்லிணக்க நிலையங்களை கொண்ட ஒன்பது மாகாணங்களிலும் இதற்கான தெரிவு நிகழ்ச்சியை   நடத்தியது, இதில் 178 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதிலிருந்து இலங்கையில் உள்ள அனைத்து இன மற்றும் மதக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு புதிய திறமையானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

எஸ்.எல்.யு ( ஒன்று கூடுவோம் இலங்கை)  பல்வேறு வகையான ஆக்கபூர்வமான முயற்சிகள் மூலம் இன மற்றும் மத ரீதியில் இளைஞர்களுடன் ஈடுபடுவதைத் தொடர்கிறது, மேலும் அவர்களுடைய நேரத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பும் எவரையும் எங்களுடன் சேர அழைக்க விரும்புகிறோம்.

ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பு பற்றி தெரியாதவர்கள், எங்களின் உத்தியோகபூர்வ வலைத்தளமான srilankaunites.org ஐப் பார்வையிடவும் அல்லது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் எங்களைப் பின்தொடரவும், எங்கள் அனைத்து முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x