பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிரான வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காதமையால், இவ்வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதம் 2ஆம், 10ஆம் மற்றும்16ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான இந்த வழக்கு விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன் முன்னிலையில், இன்று திங்கட்கிழமை (19)விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், அதற்கான நீதிமன்ற அனுமதியை,சட்டத்தரணி கோரினார்.

இவ்விடயத்தை, வெள்ளிக்கிழமை(23) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென மேல் நீதிமன்ற விசேட நீதிபதி சூசைதாசன் அறிவித்தாரென, சந்திரகாந்தனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

2005.12.25 திகதியன்று,மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்புமாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
6
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை

Next Article
கந்தப்பளை

மூன்று சிறுவர்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்பு

Related Posts
கொரோனா
Read More

நேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் இரண்டு பேர் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா…
Curfew
Read More

தனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை(30) விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.…
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியான இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய தகவல்

இலங்கையில் 473 பேருக்கு நேற்று (27) கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய…
Read More

நாட்டில் இறுதியான உயிரிழந்த தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான விவரம்

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 8 மரணங்கள் நேற்று (27) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ்…
Total
6
Share