சுஷாந்த் சிங் மரணம்,நடிகைகள்,போதைப்பொருள்

பிரபல நடிகைகள் காவல்துறை கண்காணிப்பில்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் ஊழல் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, சகோதரர் ஷோயிக் மற்றும் 4 பேரின் பிணை மனுவை நேற்று மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆதாரங்களின்படி, போதைப்பொருள்தடுப்பு காவல்துறையினர் விசாரணையின் போது, ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை கண்காணிப்பில் உள்ளனர்.

அவர் அளித்துள்ள 20 பக்க வாக்கு மூலத்தில் பிரபல நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்கள், நடிப்பு இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பலர் அடங்கிய சுமார் 25 முதல் தர பாலிவுட் பிரபலங்கள் பெயர் இடம் பெர்று உள்ளது.

ஆரம்பத்தில், ரியா தான் போதைப்பொருள் உட்கொள்ள மறுத்ததாகவும், ஆனால் பின்னர் போதை மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் என்சிபியால் விசாரணைக்கு அழைக்கப்படும் சில பாலிவுட் பிரபலங்கள் பெயர்களை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. சாரா அலி கான், ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பேஷன் டிசைனர் சிம்மோன் கம்பட்டா ஆகியோர் அதில் அடங்குவர்.

இதில் ராகுல் பிரீத் சிங் தமிழில் படங்களிலும் நடித்து உள்ளார்.இவர் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து உள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு

Next Article

அமெரிக்க ஓபன் : அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!

ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர்…
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
Total
3
Share