Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பிரபல நடிகரின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

அரசியல் உலகில் மட்டுமின்றி திரையுலகிலும் சாதனை புரிந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தமிழகமே ஒருவித அசாதாரண சூழ்நிலையில் உள்ளது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறவிருந்த பிரபல நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் ‘ஆண்தேவதை’ படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில் ஒன்று பத்தாகிறது என ஒரு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ராதாரவி, இளவரசு, சுஜா, காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாமிரா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் விஜய் மில்டன் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை சிகரம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x