பிக் பாஸ் வீட்டில் ஜாதி பெயரை கேட்டாரா சுரேஷ் சக்ரவர்த்தி? புதிய சர்ச்சை

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது தொடங்கியிருக்கும் நான்காவது சீசன் மட்டும் விதிவிலக்கா என்ன?.

கமல் ஹாசன் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். சினிமா டிவி துறைகளில் பிரபலமாக இருக்கும் பலர் போட்டியாளர்களாக வந்திருக்கிறார்கள்.

ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், ஆரி, சம்யுக்தா, அறந்தாங்கி நிஷா, கேப்ரியலா, வேல்முருகன், ஜித்தன் ரமேஷ், ரேகா, அனிதா சம்பத், சோம் சேகர், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி உள்ளிட்ட பல போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது பிக் பாஸ் துவக்க நாள் அன்று போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவரை வரவேற்ற பாலாஜி முருகதாஸை பார்த்து என்ன ஜாதி எனக் கேட்டார் என ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது.

பாலாஜி முருகதாஸ் ‘நாயர்’ என பதில் அளித்து இருக்கும் வீடியோவையும் தற்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். இதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியை தாக்கி பதிவிட்டு வருகிறார்கள்.

சுரேஷ் சக்ரவர்த்தி ஏற்கனவே பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் தனக்கு சகிப்புத் தன்மை சுத்தமாக கிடையாது என்றும் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பேன் என்றும் வெளிப்படையாக கூறி இருந்தார்.

அதனால் அவர் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல விஷயங்களையும் பார்த்து கோபப்பட்டு பேச வாய்ப்பு இருக்கிறது என அப்போது ரசிகர்கள் கணித்தார்கள்.
மேலும் சென்ற வருடம் நடந்த பிக் பாஸ் 4 வது சீசனில் வனிதா இருந்தது போல இந்த சீசனில் இவர் இருப்பார் எனவும் சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி நடிகை ஷிவானி நாராயணனை பார்த்து ‘ஏன் முகத்தை அப்படி வைத்துக் கொண்டிருக்கிறாய்’ என கேட்டதும் அவரது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக அவரை வைத்து சமூக வலைதளங்களில் அதிக மீம்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கம்பஹாவில் ஊரடங்கு

மாலை 06 மணிமுதல் கம்பஹாவில் ஊரடங்கு

Next Article

ஆஜித் காலிக்கிற்கு உண்மையிலேயே என்ன வயசு? அவரை பற்றிய முழு விவரம்

Related Posts
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Read More

கையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவரான சம்யுக்தா…
வாணி போஜன்
Read More

வாணி போஜனின் அதிரடி அறிவிப்பு!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…
Total
3
Share