பிக்பாஸ் போல பயந்து

பிக்பாஸ் போல பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன்

ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை, கிண்டி ஹால்டா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

“தமிழகத்தில் கொரோன தொற்றுப் பரவல் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 150 நாட்களாகிவிட்டன. ‘பிக் பாஸ்’ வீட்டில் 100 நாட்கள் உள்ளே இருந்துவிட்டு வெளியே வருபவர்களுக்குப் பரிசுப் பணம் வழங்கப்படும்.

150 நாட்களுக்கு மேலாக நாங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைச் சந்தித்து களப்பணியாற்றுகிறோம். ஆனால், அவர் என்றைக்காவது வெளியில் வந்தாரா? ‘பிக் பாஸ்’ போல வீட்டுக்குள் இருந்தபடி கமல்ஹாசன் அரசை விமர்சனம் செய்கிறார்” என்றார்.

மேலும், 17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்குக் கொண்டு வராமல் துரோகம் இழைத்துவிட்டது”.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

சிவாஜிலிங்கம் யாழ்.நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

Next Article

கடும் எச்சரிக்கையுடன் சிவாஜிலிங்கத்துக்கு பிணை

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Total
3
Share