பாலியல் வன்கொடுமை செய்து மூதாட்டி படுகொலை

ஓசூர் அருகே 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே கப்பக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி நஞ்சம்மாள்(62). கணவரை இழந்த, இவர் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையின் ஸ்கிராப் பொருட்களை எடுப்பதற்காக நஞ்சம்மாள் சென்றுள்ளார்.
அப்போது, பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் சிலர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறித்து சென்றனர்.

நீண்ட நேரமாகியும் நஞ்சம்மாள் வீடு திரும்பாததால் தேடி சென்ற அவரது மகன் ராமய்யா, வயல் பகுதியில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

“கூட படிக்கும் மாணவியை வன்புணர்வு செய்த மாணவன்”

Next Article

வேறொரு பெண்ணுடன் பழகியதால் காதலன் மீது ‘திராவகம் ’ வீசிய காதலி

Related Posts
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Read More

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
Total
4
Share