பாலியல் தொல்லையால் சினிமாவில் இருந்து விலகிய நடிகை

0

கேரளாவைச் சேர்ந்த கல்யாணி, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததுடன், தனது பெயரை பூர்ணிமா என்று மாற்றிக் கொண்டு ஹீரோயினாக 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

சினிமா வாய்ப்பு குறைந்து விடவே தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தார்.

அடுத்து ‘பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக சின்னத்திரை நடிகை ஆனார்.

அண்ணாமலை, தாயுமானவன், ஆண்டாள் அழகர் உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தான் நடிப்பில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

“பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் படம். உங்கள் மகள்தான் ஹீரோயின். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்” என்று கூறுவார்கள்.

அம்மாவுக்கு அட்ஜெஸ்மெண்ட் என்றால் திகதி சம்பந்தப்பட்டது என்று நினைத்துக் கொண்டு. அதற்கு ஓகே சொல்வார். அதன் பிறகுதான் அட்ஜெஸ்மெண்ட் என்பதற்கு பொருள் தெரிந்தது.

அதன்பிறகு அட்ஜெஸ்மெண்ட் என்ற வார்த்தையை கேட்டாலா போனை கட் பண்ணி விடுவார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கியபோது உயர் பொறுப்பில் இருந்தவர் என்னை இரவில் ‘பப்பு’க்கு அழைத்தார். நான் மாலையில் ‘காப்பி ஷாப்’பில் சந்திக்கலாம் என்றேன்.

அதன் பிறகு அந்த தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவே இல்லை. இப்படி பல கசப்பான அனுபவங்களால் தான் ஒரு கட்டத்தில் நடிப்பே வேண்டாம், என்று ஒதுங்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x