பாலாவின் ‘வர்மா’ : தமிழ் ராக்கர்ஸில் தேடும் ரசிகர்கள்

பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ திரைப்படம் ஓடிடி தளங்களில் நேற்று, அக்டோபர் 6 அன்று, வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், அதற்கு முன்னரே உருவான ரீமேக்கான ‘வர்மா’ நேற்று வெளியானது.

எனினும் இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள ரசிகர்களால் இலவசமாக பார்க்க முடியாது. பணம் செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும்.

இதை இந்தியாவில் உள்ள ரசிகர்களால் இலவசமாக பார்க்க முடியாது என்பதால் இப்போதே இதன் ‘பைரேட்டட் காப்பி’-ஐ கூகுளில் தேடத் தொடங்கிவிட்டனர் பல தமிழ் சினிமா ரசிகர்கள்.

இன்று, புதன்கிழமை காலை, கூகுளில் இந்திய அளவில் தேடப்பட்டவற்றில் ‘வர்மா’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகியவையும் அடக்கம்.

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார்.

இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கத்தில் மீண்டும் புதிதாக ரீமேக் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆதித்யா வர்மா திரைப்படம் திரையரங்கில் வெளியான போதும் பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். இந்நிலையில் அக்டோபர் 6 அன்று பாலா இயக்கிய வர்மா ஓடிடி தளத்தில் வெளியானது.

‘வர்மா’ ஓடிடி தளத்தில் வெளியாகும் தகவலை பகிர்ந்திருக்கும் நடிகை ரைஷா வில்சன், இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் பாலா.

படப்பிடிப்பு தொடங்கப்பட்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்தார் பாலா. திரைப்படத் தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக விளம்பரங்களைத் செய்ய ஒரு பெரிய ஆடியோ வெளியீட்டு நிகழ்வை நடத்தினர்.

படத்தின் பணிகள் நிறைவடைந்து காதலர் தினத்துக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

பின்பு தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிடுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

”எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ‘வர்மா’ படம் எங்களுக்குப் போதுமான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அர்ஜுன் ரெட்டி படத்திற்கும் வர்மா படத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது,” என்று கூறி படத்தைக் கைவிடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் ‘வர்மா’ படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று பாலா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பாலா வெளியிட்ட அறிக்கையில், ” ‘வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்,” என்று பாலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலாவின் வர்மா செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ஜீ.எல் பீரிஸ்

பரீட்சை தினங்களில் மாற்றமில்லை

Next Article
விஜயகாந்த்

தேமுதிக தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்

Related Posts
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
ஃப்ரைன்
Read More

அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல்…
Read More

கையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவரான சம்யுக்தா…
Total
3
Share