தலைப்புச் செய்திகள்வெளிநாடு

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல்; இருவர் பலி

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் வழக்கம்போல் இன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

அப்போது ஆயுதங்களுடன் அங்கு பயங்கரவாதிகள், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே நுழைந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில், பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

ஒரு பயங்கரவாதி பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்து பதுங்கிக் கொண்ட நிலையில், அலுவலக பணியாளர்கள் அனைவரையும் பொலிஸார் வெளியேற்றினர்.

பின்னர் அப்பகுதி முழுவதையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பயங்கரவாதி சுற்றி வளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close