Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

பலமான பெங்களூரு அணியிடம் பஞ்சாப் ஆட்டம் எடுபடுமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஷார்ஜாவில் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியை ‌மட்டுமே பதிவு செய்துள்‌ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 2‌5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பஞ்சாப் அணி 13 போட்டிகளிலும், பெங்களூரு அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.

சீசனின் முதல் பாதியை அசத்தலாக கடந்துள்ள பெங்களூரு மற்றும் மோசமாக கடந்துள்ள பஞ்சாப் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து அறிவோம்.

கேப்டனின் எழுச்சி, டிவில்லியர்ஸின் மிரட்டல் என பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்துள்ளது பெங்களூரு அணி. தொடக்க வீரர்களான ஃபின்ச் மற்றும் படிக்கல் அணிக்கு சராசரியான ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது பலமாக உள்ளது.

மத்திய வரிசையில் ரன்களைக் குவிக்க துபே, கிறிஸ் மாரிஸ், சுந்தர் ஆகியோர் கூடுதல் வலு சேர்க்கின்றனர்.

பந்து வீச்சில் சைனி, சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் முக்கிய தருணங்களில் ரன்களை வாரி இறைப்பது பலவீனமே. சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை சுருட்டும் அஸ்திரமாக உள்ளார் சாஹல்.

கேப்டன் பொறுப்புடன் விளையாடி வரும் போதிலும் விளையாடிய 7 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்து பரிதாப நிலையில் உள்ளது பஞ்சாப் அணி. அகர்வால், பூரன் ஆகியோர் மேல்வரிசையில் ஆறுதல் அளித்தாலும், நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் சோபிக்க தவறுவது அணிக்கு பெரும் பின்னடைவு.

பந்துவீச்சில் ஷமி, காட்ரெல் ஆகியோர் சுமாரான ஃபார்மிலேயே உள்ளனர். இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் மட்டுமே பக்கபலம். முஜீப் உர் ரஹ்மான் மற்றும் கிறிஸ் ஜோர்டனின் பங்களிப்பும் பந்து வீச்சில் பெரியளவில் உதவவில்லை.

இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருவது மட்டுமே பந்து வீச்சில் உள்ள ஒரே நல்ல செய்தி. நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லை அந்த அணி களமிறக்காமலேயே இருப்பது புரியாத புதிராகவே உள்ளது.

விளையாடும் அனைத்து போட்டிகளையும் அதிக ரன் ரேட்டுகளுடன் வெல்ல வேண்டிய நெருக்கடியான சூழலில் சிக்கியுள்ள பஞ்சாப் அணி, பலம் மிகுந்த பெங்களூரு அணியிடம் இருந்து வெற்றிக்கணக்கை தொடங்குமா என்பதே இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு. ‌

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x