பம்பலப்பிட்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், பாதசாரி மீது மோதியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி விபத்தில் ஒருவர்  உயிரிழப்பு

பம்பலப்பிட்டி 

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவையில்  ஏற்பட்ட விபத்தில் நேற்று இரவு  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், பாதசாரி மீது மோதியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலியில் வசிக்கும் 64 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 சடலம் தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.