நித்யா மேனன்

பத்திரிகையாளர் கொலை வழக்கு படத்தில் நித்யா மேனன்

பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கே கொலை வழக்கு படத்தில் நித்யா மேனன் நடிப்பதாக வந்த செய்திக்கு, அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவம் குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ‘பிராணா’ என்ற படம் 4 மொழிகளில் உருவாகிறது.

எழுத்தாளர் வேடத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். விகே.பிரகாஷ் இயக்குகிறார். இது கவுரி லங்கேஷ் கொலை வழக்கை மையமாக கொண்ட கதையா, கௌரி லங்கேஷ் வேடத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று நித்யாமேனனிடம் கேட்கப்பட்டது.

‘பிராணா படம் 4 மொழிகளில் உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக 4 முறை நடிக்க வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமத்தை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இதுபோல் வேறு யாரும் நடித்திருக்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை. எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

கவுரி லங்கேஷ் பாணியிலான கதை என்றாலும் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு 4 மாதத்துக்கு முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.

அந்த சம்பவத்துக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை. சகிப்புதன்மை இல்லாதது இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறது என்பது தெரிகிறது.

மக்கள் தங்கள் எண்ணங்களை எந்த பயமும் இல்லாமல் வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. அதற்காக கண்டபடி எழுதலாம் என்று கூறவில்லை. உண்மை என்ன என்பதை ஒருவர் வெளிப்படுத்த முயலும்போது தாங்கள் மிரட்டப்படுவோம் என்று அவர்கள் பயப்படக் கூடாது. அதுபோன்ற சூழல் சமூகத்தில் ஆரோக்கியமற்ற விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றார்.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
தயா மாஸ்டர்

தயா மாஸ்டர் மீது யாழில் தாக்குதல்

Next Article
ரவிநாத ஆரியசிங்க

ஜெனிவாவில் இருந்து ரவிநாத ஆரியசிங்க இடமாற்றம்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
0
Share