பணிப்பெண்கள் விவகாரம் - ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது

குறித்த நபர் இன்று (29) அதிகாலை 3.57 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கை திரும்ப கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

பணிப்பெண்கள் விவகாரம் - ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது

ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய ஈ. குஷான்,  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (29) அதிகாலை 3.57 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கை திரும்ப கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

சுற்றுலா விசாவில் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டமை மற்றும் மனித கடத்தல் உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.