பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

செங்குன்றத்தில் ராஜலெட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளர்கள் லட்சுமி, மகாலட்சுமி இறந்தனர்.

வெடி விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று மதுரை அருகே பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்தில் 5 பெண்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர்.
அறைகள் தரைமட்டமாயின. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே செங்குளத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த சண்முகராஜ் நடத்தி வருகிறார்.

ஆலையில் நேற்று 37 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பிற்பகல் திடீரென பட்டாசு உற்பத்தி செய்யும் அறை, பயங்கர சத்தத்துடன் வெடித்து தரைமட்டமானது. இதில் அருகிலுள்ள 2 அறைகளின் மேற்கூரைகளும் வெடித்துச் சிதறின.

பட்டாசு விபத்தில் உயிரிழந்த அய்யம்மாள்,வேல்தாய், லெட்சுமி, காளீஸ்வரி, சுருளியம்மாள் ஆகிய 5 குடும்பத்தினருக்கும் முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்த குடும்பத்துக்கு 1 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

Tags:விருதுநகர்பட்டாசு ஆலைவெடிவிபத்து

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
5
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில்

Next Article

அரசியலுக்கு ஆயத்தமா? - நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

Related Posts
கொரோனா
Read More

கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொட மற்றும் திவுலுப்பிட்டிய கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பினை…
சரத் வீரசேகர
Read More

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவிப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சரான சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி…
Total
5
Share