Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பச்சிளம் குழந்தையுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள உமையாள்புரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் தவமணி (27). இவருக்கும், சார்வாய் புதூரை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தவமணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, மாமனார் வீட்டுக்கு நேரில் சென்றிருந்த மணிகண்டன், மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.

இந்நிலையில் நவ.3ம் திகதி மாலை பெரியசாமிக்கு அழைத்த உறவினர் தவமணியும் குழந்தையும் இறந்து விட்டதாக தகவல் சொல்லியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுடன் சார்வாய் புதூருக்கு வந்தார்.

அங்கு பூட்டிய அறைக்குள் தவமணியும், குழந்தை யாஷிகாவும் ஒரே கயிற்றில் சடலமாகத் தொங்கினர். பெரியசாமியும் உடன் வந்த உறவினர்களும் கதவை உடைத்து உள்ளே சென்று சடலங்களை மீட்டனர்.

இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்