முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையான காலப்பகுதியில் சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு செல்வதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யின்துடுவ இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
மேலும், நீதிமன்றத்தில் உள்ள அவரது கடவுச்சீட்டை 2 இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் ஊடாக அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் 2 தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை மிஸ் பண்ணாமல் தெரிஞ்சுக்கோங்க!
புத்தம் புதிய தமிழ் காணொளிகளை உடனுக்குடன் பார்வையிட தமிழ் வீடியோ.
புத்தம் புதிய சுவாரசிய தகவல்களை பார்வையிட தமிழ் கிசு கிசு.
அனைத்து உலக நடப்புகளையும் பெற்றுக்கொள்ள கொழும்பு தமிழ் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
#TamilNews, #SriLanka, #Colombo, #lka #TamilSportsNews, #TamilCinemaNews, #BiggBossTamil