அடுத்த தலைமுறை 5G தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் Nokia நிறுவனம் இறங்கியுள்ளது.
அதற்காக ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து நிறுவனம் 500 மில்லியன் யூரோவைக் கடனாகப் பெற்றுள்ளது.
புதிய 5G தொழில்நுட்பம் அதிக வேகம் கொண்டது. தற்போதைய 4G தொழில்நுட்பக் கட்டமைப்பை விட 50-இலிருந்து 100 மடங்கு வேகமான தகவல் பரிமாற்றத்துக்கு அது வகை செய்யும்.
ஓட்டுநரில்லா வாகனம் போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கு முக்கிய கட்டமைப்பாக அது திகழும்.
5G கட்டமைப்பு விசாலமாகச் செயல்படக்கூடியது; நிலையான இணைப்புகளைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.