Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

நேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் இரண்டு பேர் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கடந்த 26ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் உயர் குருதி அழுத்தம் மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் கொவிட் 19 தொற்றினால் தீவிரமடைந்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு – 08 பகுதியை சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் ஆஸ்துமா, கொவிட் 19 உடன் நிமோனியா நோய் நிலமையாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news