Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

நெருக்கடிக்கு தீர்வுகாண இன்று கூடுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான நெருக்கடி குறித்து முடிவெடுக்க கட்சியின் உறுப்பினர்கள் இன்று கூடுகின்றனர்.

இதன்படி இந்த கூட்டம் கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று மாலை 03 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் பதவிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதேபோல எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கட்சியின் முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக கட்சி உறுப்பினர்கள் இன்று கூடுகின்றனர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Latest news

Related news