கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல், புனித வெள்ளி, 40 நாட்கள் உபவாசம் , நோன்பு காலம் ,தவக்காலம் , சாம்பல் புதன் , திருநீற்றுப் புதன், தவக்காலம் ஆரம்பம், சிறப்பு திருப்பலிகள் , சிலுவை அடையாளம்

‘நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய்’ – கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல்!

இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மத மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.

அதை முன்னிட்டு 40 நாட்கள் உபவாசம் இருப்பது அவர்களின் வழக்கம். இந்த நோன்பு காலம் தவக்காலம் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுகிறது.

தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனாக கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி இன்று தவக்காலம் தொடங்கியுள்ளது.

இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குத்தந்தை சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டார்.

இந்த சாம்பல், கடந்த ஆண்டு குருத்தோலை திருநாளின் போது ஊர்வலமாக எடுத்துச்சென்று அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தவையாகும்.

அவற்றை சேகரித்து சுட்டு சாம்பலாக்கி நெற்றியில் பூச பயன்படுத்தப்பட்டது.

இந்த சாம்பலை நெற்றியில் பூசும்போது மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறி பங்குத்தந்தை ஒவ்வொருவரின் நெற்றியிலும் சிலுவை அடையாளம் வரைந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

அவர் இங்க வருவதால் எந்த பலனும் இல்லை... பாஜக நிராரிப்பு... அப்செட்டில் ஓபிஎஸ் தரப்பு!

Next Article
தவக்கால சிந்தனை

பிதாவாகிய தேவனின் அன்பு - தவக்கால சிந்தனை

Related Posts
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Read More

10 நாட்களுக்கு திருமலையில் சொர்க்க வாசல் திறக்க முடிவு

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி, திருமலை அன்னமய பவனில், நேற்று…
Total
2
Share